புதுக்கோட்டை அருகே 12ம் வகுப்பு மாணவி மாயம்; போலீசார் விசாரணை
X
பைல் படம்.
By - Keerthi, Reporter |28 July 2021 9:22 AM IST
புதுக்கோட்டை அருகே ராமுடையான்பட்டி பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி திடீரென மாயமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, ராமுடையான்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி இவரது மகள் மைதிலி வயது 17. இவர் கந்தர்வகோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
கொரேரோனா ஊரடங்கு என்பதால் அவர் வீட்டில் இருந்தபடி படித்து வந்த நிலையில், கடந்த 22-ம் தேதி மைதிலி வீட்டிலிருந்து மாயமாகியுள்ளார்.
அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால், மாணவியின் தந்தை மணி என்பவர் உடையாளிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இப்புகாரின் பேரில் உடையாளிப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் மாயழகு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
பள்ளி மாணவி மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu