கந்தர்வகோட்டை அருகே மின்சாரம் தாக்கி 11 ஆடுகள் பலி

கந்தர்வகோட்டை அருகே மின்சாரம் தாக்கி 11 ஆடுகள் பலி
X

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே புனல்குளத்தில் மின்சாரம் தாக்கி 11 ஆடுகள் உயிரிழந்தது

இன்று மதியம் பெய்த கனமழையின் போது, அந்தப் பகுதியில் இருந்த மின்சார வயர் இடி தாக்கியதன் காரணமாக அறுந்து கிடந்தது

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள குளத்தில் மின்சார வயர் அறுந்து விழுந்ததில் மேய்ந்து கொண்டிருந்த 11 ஆடுகள் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி உயிரிழந்தது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகில் உள்ள புனல்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முத்தரசன் என்பவர், சுமார் 50 ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், இன்று ஆடுகளை மேய்ப்பதற்காக அங்குள்ள வயல் வெளிக்கு ஓட்டிச்சென்றார். இன்று மதியம் பெய்த கனமழையின் போது, அந்தப் பகுதியில் இருந்த மின்சாரவயர் இடி தாக்கியதன் காரணமாக அறுந்து கீழே விழுந்து கிடந்துள்ளது.அப்போது, அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் மின்சார கம்பி மீது கால்களை வைத்ததால், மின்சாரம் தாக்கி 11 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இறந்த ஆடுகளின் மதிப்பு சுமார் 75 ஆயிரம் ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது இதனால் விவசாயி முத்தரசன் மிகுந்த மனவேதனை அடைந்தார்.

Tags

Next Story
future ai robot technology