அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை நம்பூரான்பட்டியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்க வலியறுத்தி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை அடுத்த நம்பூரான்பட்டி பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால், விவசாயிகள் அப்பகுதியில் விளைந்த நெல்லை ஆங்காங்கே கொட்டி வைத்திருந்தனர்.

இந்நிலையில் இப்பகுதியில் பெய்த மழையினால் நெல் பயிர்கள் முளைக்கத் தொடங்கியது இதனால் வேதனை அடைந்த நம்பூரான்பட்டி கிராம விவசாயிகள் இன்று மருங்குளம் பகுதியிலிருந்து கந்தர்வகோட்டை பகுதிக்கு வரும் அரசுப் பேருந்தை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் இரண்டு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது எந்த அதிகாரியும் பேச்சுவார்த்தைக்கு வராததால் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்

பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து வீணாகி வருவதால் பெரும் நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர் எனவே உடனடியாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!