அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு திட்டப் பணிகள்: அமைச்சர் தொடக்கம்
அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு திட்டப் பணிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு திட்டப் பணிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு திட்டப் பணிகளை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் (13.05.2022) பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் கூறியதாவது: கிராமப்புற மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் எரிச்சி சிதம்பரவிடுதியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் முதலமைச்சர் சட்டமன்ற 110 விதியின் கீழ் அறிவித்த 250 மெ.டன் கொள்ளளவு கொண்ட தானிய சேமிப்பு கிட்டங்கி கட்டுமான பணிகள் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளன. அதற்கான கட்டுமான பணிகளை பூமிபூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இராஜேந்திரபுரம், எருக்கலக்கோட்டை நாகம்மாள் கோவில் கலையரங்கம் ரூ.7 லட்சம் மதிப்பீட்டிலும், இராஜேந்திர புரத்தில் பயணியர் நிழற்குடை ரூ.6.5 லட்சம் மதிப்பீட்டிலும் கட்டுமான பணிகளுக்கான பூமிபூஜை செய்து தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. இக்கட்டுமான பணிகள் அனைத்தும் விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.
இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர்; சு.சொர்ணராஜ், அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், வட்டாட்சியர் காமராஜ், வேளாண் விற்பனைக்குழு செயலாளர் மல்லிகா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu