அறந்தாங்கி பகுதியில் நாளை மின்தடை: மின்சார வாரியம் அறிவிப்பு

மின்சாரம் அறந்தாங்கி நகர் உபகோட்டத்தின் கட்டுப்பாட்டில் ராஜேந்திரபுரம் கோட்டை மற்றும் 11 கே.வி பள்ளிவாசல் மின்பாதைகளில் சிறப்பு பராமரிப்பு பணிக்காக நாளை(திங்கள்கிழமை) மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
அறந்தாங்கி மின்வாரிய செயற்பொறியாளர் கே. தனபால் வெளியிட்ட தகவல்: அறந்தாங்கி ராஜேந்திரபுரம் 33-11 KV துணைமின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெரும் 11 KV கோட்டை மின்பாதையில் உள்ள திருவள்ளுவர் தெரு, காரைக்குடி ரோடு, புதுக்கோட்டை ரோடு, கோட்டைப்பகுதிகள், அங்காளம்மன் கோவில் பகுதி, பள்ளினால் பகுதி, ஆவுடையார் கோவில் ரோடு பகுதி, புதுவயல் சாலை, ஆலங்குடி ரோடு பகுதி, பெருமாள்பட்டி, இடையார், புதுவாக்கோட்டை, சும்மங்காடு, வீரமங்களம் பகுதிகளிலும்.
11 KV பள்ளிவாசல் மின்பாதையில் உள்ள கூத்தாடிவயல் பகுதி செந்தமிழ் நகர் பகுதி, பொற்குடையார் கோவில் பகுதி. வீரகாளியம்மன் கோவில் பகுதி. உழவர் சந்தை பகுதி, கட்டுமாவடி ரோடு முக்கம், எல்என்-புரம் பகுதி, வைரிவயல், விக்னேஷவரபுரம், பள்ளத்திவயல், குண்டாவயல், துரையரசபுரம், கீழச்சேரி, பரமந்தார் ஆகிய பகுதிகளில் வருகின்ற 27.06.2022 (திங்கட்கிழமை) அன்று நடைபெறும் சிறப்பு பராமரிப்பு பணி காரணமாக காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படும். மேலும் இப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் மின்நுகர்வோர்கள் இம்மின் நிறுத்தம் காரணமாக ஏற்படும் சிரமங்களை பொருத்துக் கொண்டு ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu