புதுக்கோட்டையில் வளர்ச்சித்திட்டப்பணிகள்: அமைச்சர் மெய்யநாதன் தொடக்கம்

புதுக்கோட்டையில் வளர்ச்சித்திட்டப்பணிகள்: அமைச்சர் மெய்யநாதன்  தொடக்கம்
X

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடக்கி வைத்தார்

திறந்து வைத்தார்.

Development projects in Pudukkottai District Minister Meyyanathan inaugurated

பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், மாங்குடி ஊராட்சி, மருதங்குடியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ், ரூ.5.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தினை, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் (17.06.2022) திறந்து வைத்தார்.

மேலும் மருதங்குடி அய்யனார் கோவில் செல்லும் வழியில் ரூ.3.90 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலையினையும் அமைச்சர் திறந்து வைத்தார்.அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், கீழாத்தூரில் உள்ள புதிய அங்கன்வாடி மையக் கட்டடத்தை பார்வையிட்டு, வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.

மேலும் கீழாத்தூர் அரசு நடுநிலைப்பள்ளியினை அமைச்சர் .சிவ.வீ.மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின்போது, அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், ஞான இளங்கோவன், ஒன்றியக்குழு உறுப்பினர் அண்ணாதுரை, கீரமங்கலம் பேரூராட்சித் தலைவர் சிவக்குமார், ஊராட்சிமன்றத் தலைவர் இந்திரா அன்பரசு, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business