மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமை ஆய்வு செய்த அமைச்சர்கள்

மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமை ஆய்வு செய்த அமைச்சர்கள்
X

மக்களுடன் முதல்வர்” திட்டத்தின்கீழ், மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் பார்வையிட்டார்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் ஆய்வு செய்தனர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற ,‘மக்களுடன் முதல்வர்” திட்டத்தின்கீழ், மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் பார்வையிட்டார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சி, அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில், ‘மக்களுடன் முதல்வர்” திட்டத்தின்கீழ், மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் இன்று (28.12.2023) பார்வையிட்டார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் அரசுத் துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் அவர்களைச் சென்றுசேரும் வகையில் ‘மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தை 18.12.2023 அன்று தொடங்கி வைத்தார்கள். அதன்படி, அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் மக்களை சென்றடையும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும், ‘மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.

‘மக்களுடன் முதல்வர்“ என்ற இப்புதிய திட்டத்தின் கீழ், பொதுமக்கள் அதிகமாக அணுகும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டுக் கழகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, எரிசக்தி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை ஆகிய 13 அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெற்று தீர்வு காண்பதற்கு முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில், அனைத்து நகர்ப்புற, மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில், அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

முன்னதாக, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி , அரிமளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ‘மக்களுடன் முதல்வர்” திட்டத்தின்கீழ், மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமினை பார்வையிட்டார்.

இந்நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார், முமுன்னாள் சட்டமன்ற உறுப்பினர் .உதயம் சண்முகம், அறந்தாங்கி நகர்மன்றத் தலைவர் ஆனந்த், அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், அரிமளம் ஒன்றியக்குழுத் தலைவர் மேகலாமுத்து, நகர்மன்ற துணைத் தலைவர் முத்து (எ) சுப்ரமணியன், அறந்தாங்கி நகராட்சி ஆணையாளர் பாலு, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself