அறந்தாங்கி: வெளிமாநில மதுபாட்டில்களை திருமண மண்டபத்தில் பதுக்கியவர்கள் கைது!

அறந்தாங்கி: வெளிமாநில மதுபாட்டில்களை திருமண மண்டபத்தில் பதுக்கியவர்கள் கைது!
X

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள், கைது செய்யப்பட்டவருடன் போலீசார்.

அறந்தாங்கியில் உள்ள திருமண மண்டபத்தில் வெளி மாநில மதுபாட்டில்களை பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர். மது வகைகளையும் பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருங்காடு கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வெளிமாநில மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததாக அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயசீலனுக்கு தகவல் கிடைத்தைது.

அதன்படி அவரும், ஆவுடையார்கோவில் காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், உதவி காவல் ஆய்வாளர் ராஜேஷ்குமார், காவலர் சரவணன் ஆகியோர் பெருங்காடு கிராம பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு சென்று சோதனையிட்டனர்.

அங்கு வெளி மாநிலத்தைச் சேர்ந்த மதுபாட்டில்கள் கள்ள சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததை கண்டனர். உடனடியாக அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் திருமண மண்டபத்தின் உரிமையாளரான மஞ்சக்கரையைச் சேர்ந்த ரவி மற்றும் சிவக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட வெளிமாநில மது பாட்டில்களின் மதிப்பு 1,20,000 ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்