பள்ளிக்கட்டடங்களை காணொளி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர்

பள்ளிக்கட்டடங்களை காணொளி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர்
X

புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய பள்ளிக் கட்டடங்களை காணொளி வாயிலாக முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக்காட்சி வாயிலாக புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார். புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக்காட்சி வாயிலாக இன்று (26.12.2023) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், பள்ளத்திவிடுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ரூ.28 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ், ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி களுக்கு சுமார் 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6000 புதிய வகுப்பறைகளும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1200 வகுப்பறைகளும், என மொத்தம் 1050 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 7200 வகுப்பறைகள் நடப்பாண்டிலேயே கூடுதலாகக் கட்டப்படும் என்று அறிவித்தார். அதன் அடிப்படையில் 2022-23-ஆம் ஆண்டில் 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5,653 புதிய வகுப்பறைகள் கட்ட அரசாணை வெளியிடப்பட்டது. இத்திட்டம் “குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்” என்று ஊரகப் பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இக்கட்டடங்கள் அனைத்தும் குழந்தை நேய சிறப்பு அமைப்புகளான உயர்த்தப்பட்ட மேற்கூரை, விசாலமான தாழ்வாரம், காற்றோட்டமிக்க ஜன்னல் வசதிகள், வழுக்காத தரைகள், கற்றலை ஊக்குவிக்கும் சுவர் ஓவியங்கள், வாழ்க்கைப் பாடங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.

அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றையதினம் 21 பள்ளிகளில் ரூ.5.91 கோடி செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி , புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஆயிஷாராணி, வட்டார கல்வி அலுவலர் கவிதா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!