டிரோன் மூலம் வேளாண்பயிர்களில் பயிர் பாதுகாப்பு மருந்து தெளிக்க பயிற்சி

டிரோன் மூலம் வேளாண்பயிர்களில் பயிர் பாதுகாப்பு மருந்து தெளிக்க பயிற்சி
X

வேளாண்மையில் டிரோன் மூலம் பயிர்களில் களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி மற்றும் ஊட்டச் சத்துகளை தெளிப்பது தொடர்பான பயிற்சி வம்பன் வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்றது

வேளாண் - உழவர் நலத்துறையின் மூலம் அட்மா மாநில விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் டிரோன் மூலம் மருந்து தெளிக்க பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டாரத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறையின் மூலம் அட்மா மாநில விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் வேளாண்மையில் டிரோன் மூலம் பயிர்களில் களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி மற்றும் ஊட்டச் சத்துகளை தெளிப்பது தொடர்பான பயிற்சி வம்பன் வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்றது.

இந்தபயிற்சியில் புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் .மா.பெரியசாமி, வேளாண்மை துணை இயக்குநர்,உழவர் பயிற்சி நிலையம், குடுமியான்மலை மரியரவி ஜெயக்குமார், வம்பன் வேளாண் உதவி இயக்குனர் , வம்பன் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் யுவராஜா, வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தபயிற்சியில் கலந்து கொண்டு பேசிய வம்பன் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் டாக்டர்.யுவராஜ் வேளாண்மையில் டிரோன்களின் பயன்பாடுகள் பற்றியும், குறைந்த நேரத்தில் அதிக அளவு பரப்பில் தெளிப்பதற்கும், ஆட்கள் பற்றாக்குறையை குறைப்பதற்கும், டிரோன் மூலம் தெளிப்பதால் தண்ணீர், பயிர் பாதுகாப்பு மருந்துகள் குறைந்த அளவு தேவைப்படுகிறது என்று கூறினார். அதனைத் தொடர்ந்து பேசிய டாக்டர் செந்தில்குமார் விவசாய தொழிலாளர் களுக்கு ஏற்படும் உடல் நலக் கேடுகள் குறைகின்றது என்றும் இதன் மூலம் நெல், மக்காச் சோளம், கரும்பு, பருத்தி, காய்கறி பயிர்கள், பூக்களுக்கும் தெளிப்பு செய்து விவசாயிகள் பயன் பெறலாம் என்றும் கூறினார்.

பயிற்சியின் இறுதியில் உளுந்து பயிரில் டிரோன் மூலம் திரவ நானோ யூரியா பயன் படுத்தும் முறைசெயல் விளக்கம் மூலம் செய்து காண்பிக்கப்பட்டது.இந்த பயிற்சியில் கிராமப்புற வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ் குடுமியான்மலை வேளாண்மை கல்லுரி, திருச்சி வேளாண்மை கல்லுரி, ஈச்சங்கோட்டை வேளாண்மை கல்லுரி, மதர்தெரசா வேளாண்மை கல்லுரி மாணவர்கள் கலந்து கொண்டணர். இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை திருவரங்குளம் வட்டார அட்மா மாநில விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் தொழில் நுட்ப மேலாளர் கு.நாகராஜன் உதவி தொழில் நுட்ப மேலாளாகள்; அ.ஆரோக்கியராஜ் மற்றும் ஸ்ரீநிதி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!