குறுங்காடுகள் அமைக்கும் திட்டம்: அமைச்சர் மெய்யநாதன் தொடக்கி வைப்பு

குறுங்காடுகள் அமைக்கும் திட்டம்: அமைச்சர் மெய்யநாதன் தொடக்கி வைப்பு
X

புதுக்கோட்டை மாவட்டம், அரையப்பட்டி ஊராட்சியில் குறுங்காடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் பணிகளை, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடக்கி வைத்தார்.

சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் 22 % உள்ள வனப்பரப்பினை 33 % உயர்த்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகிறது

புதுக்கோட்டை மாவட்டம், அரையப்பட்டி ஊராட்சியில் குறுங்காடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் பணிகளை, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் கூறியதாவது: அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற திராவிட மாடலின் கீழ் முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் தமிழகத்தில் சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் 22 சதவீதமாக உள்ள வனப்பரப்பினை 33 சதவீதமாக உயர்த்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகிறது.புதுக்கோட்டை மாவட்டம், அரையப்பட்டி ஊராட்சி, வன்னியன்வீடுதியில் உள்ள நவாக்குளத்தில் குறுங்காடுகள் அமைக்கும் திட்டம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது

இதில் 3 ஏக்கர் பரப்பளவில் வேம்பு, பூவரசு, அரசமரம், புங்கன், நாவல் மற்றும் வாகை உள்ளிட்ட 500 மரக்கன்றுகளை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டப் பணியாளர்கள் மூலமாக 5 நிமிட காலத்திற்குள் நடவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதி பசுமையாக உருவாக்கப்பட உள்ளது. மேலும் இத்திட்டத்தின் கீழ் அரசு மற்றும் தனியார் இடங்களில் குறுங்காடுகள் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பசுமைப் பள்ளி திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் திட்டம் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் தொடக்கி வைக்க உள்ளார்கள்.மக்களின் தேவையறிந்து திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு உற்ற துணையாக இருந்து மக்கள் நலத்திட்டங்களின் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர்சிவ.வீ.மெய்யநாதன் .

அதனைத் தொடர்ந்து அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத் திற்குட்பட்ட அழியாநிலை ஊராட்சியில் வாழக்குடியிருப்பு பகுதியில் ரூ.2.30 லட்சம் மதிப்பீட்டிலும், சித்தாலங்குடியிருப்பு பகுதியில் ரூ.2.70 லட்சம் மதிப்பீட்டிலும்; 14வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளையும்,பஞ்சுமில் குடியிருப்பு பகுதியில் ரூ.6.68 லட்சம் மதிப்பீட்டில் 15 -வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளையும் என மொத்தம் ரூ.11.68 லட்சம் மதிப்பீட்டிலான பணிகளை அமைச்சர் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர்கள் அபிநயா (புதுக்கோட்டை), சொர்ணராஜ் (அறந்தாங்கி), ஒன்றியக்குழுத் தலைவர்கள் வள்ளியம்மை தங்கமணி (திருவரங்குளம்), மகேஸ்வரி சண்முகநாதன் (அறந்தாங்கி) மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!