ஆலங்குடியில் நடமாடும் காய்கறி விற்பனையை துவக்கி வைத்த அமைச்சர் மெய்யநாதன்

ஆலங்குடியில் நடமாடும் காய்கறி விற்பனையை துவக்கி வைத்த அமைச்சர் மெய்யநாதன்
X

புதுக்கோட்டை ஆலங்குடியில் அமைச்சர் மெய்யநாதன், நடமாடும் காய்கறி விற்பனையை தொடங்கி வைத்தார்.

கொரோணா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாளை திங்கட்கிழமை முதல் முழு ஊரடங்கு தமிழக அரசு அறிவித்துள்ளது அதன்படி அத்தியாவசிய பொருட்களான காய்கறி மளிகை பால் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் வீடுகள் தேடி வழங்குவதற்காக கூட்டுறவு பண்டகசாலை மூலம் நேரடியாக அந்தந்த பகுதிகளில் விற்பனை செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது

அதன் ஒரு பகுதியாக இன்றுபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுவிற்பனை சங்கத்தின் சார்பில் வாகனங்கள் மூலம் நடமாடும் காய்கறிவிற்பனையினை துவக்கி வைத்தார்.தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர்

முதலமைச்சர் அவர்கள் கோவிட் நோய் தொற்றைகட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில்மேற்கொண்டு வருகிறார்கள். இதன் ஒருபகுதியாக கோவிட் பரவலை தடுக்கும்வகையில் நாளை முதல் தமிழகத்தில் ஒருவார காலத்திற்கு அத்தியாவசியதேவைகளை தவிர்த்து எவ்வித தளர்வுகளற்ற முழு ஊரடங்குஅறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்த்துஅவர்கள் இருப்பிடங்களிலேயே காய்கறிகளை வழங்கும் வகையில் நடமாடும்வாகனம் மூலம் காய்கறி விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதனடிப்படையில் இன்றையதினம் ஆலங்குடியில் வாகனங்கள் மூலம்நடமாடும் காய்கறி விற்பனை துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதில் பொதுமக்களுக்கு தேவையான உருளைகிழங்கு, கத்தரிக்காய், வெண்டைக்காய்,வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகள் பொதுமக்கள்இருப்பிடங்களுக்கே நேரடியாக சென்று தரமாகவும், விலை குறைவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்ற பல்வேறு காய்கறிகள் அடங்கிய காய்கறி தொகுப்பு பைகளும்குறைவான விலையில் வழங்கப்படுகிறது. இந்த நடமாடும் காய்கறி விற்பனைவாகனம் ஆலங்குடி பேரூராட்சியில் கலீப்நகர், அண்ணாநகர், பள்ளத்திவிடுதி,கல்லாலங்குடி, எஸ்எஸ் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாகசென்று பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகளை விற்பனை செய்ய உள்ளது.

மேலும் கூட்டுறவுத்துறையின் மூலம் மாவட்டத்தில் 60 இடங்களில் நடமாடும்காய்கறி கடைகள் மூலம் காய்கறிகள் வினியோகம் செய்யப்பட உள்ளது.கோவிட் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு அறிவித்துள்ள இந்த முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டுவெளியே வராமல் தங்களது வீடுகளில் பாதுகாப்பாக இருப்பதுடன், கோவிட்தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். என பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்உமாமகேஸ்வரி, திருவரங்குளம் ஒன்றியக் குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!