பயனாளிகளுக்கு பட்டா, சாதிச்சான்று: ஆட்சியர் வழங்கல்

பயனாளிகளுக்கு பட்டா, சாதிச்சான்று: ஆட்சியர் வழங்கல்
X

 விளிம்பு நிலை மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், பழங்குடியினர் ஜாதிச் சான்றிதழ்களையும், மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா வழங்கினார்.

விளிம்பு நிலை மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், பழங்குடியினர் ஜாதிச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன

புதுக்கோட்டை மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் விளிம்பு நிலை மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும் பழங்குடியினர் ஜாதிச் சான்றிதழ்களையும் மாவட்ட நிர்வாகம் வழங்கியது.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், விளிம்பு நிலை மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், பழங்குடியினர் ஜாதிச் சான்றிதழ்களையும், மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா வழங்கினார்.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விளிம்பு நிலையிலுள்ள பொதுமக்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடையும் வகையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில், இன்றையதினம் கறம்பக்குடி வட்டத்தில், 18 விளிம்புநிலை மக்களுக்கும் மற்றும் 12 பாரத பிரமரின் வீடு கட்டும் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களும், 94 நபர்களுக்கு பழங்குடியினர் ஜாதிச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ள மக்கள் அனைவரும் படித்து தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து, வருவாய்த்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாவட்ட முன்னோடி வங்கி ஆகிய துறைகளின் மூலம் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப் பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் அனைவரும் தங்கள் சமூகத்தின் எதிர்காலம் பிரகாசமாகும் வகையில் தங்களது குழந்தைகளை நன்கு படிக்க வைத்து தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா தெரிவித்தார்.

இந்நிகழ்வில், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கி.கருணாகரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (தொ.வ) பெ.வேல்முருகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த், கறம்பக்குடி வட்டாட்சியர் ராமசாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
why is ai important to the future