ஆன்லைன் பதிவு குளறுபடியால் நெல்கொள்முதல் பணி நிறுத்தம்: விவசாயிகள் அதிர்ச்சி

ஆன்லைன் பதிவு குளறுபடியால்  நெல்கொள்முதல் பணி நிறுத்தம்: விவசாயிகள் அதிர்ச்சி
X

ஆன்லைன் பதிவில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளால் ஆலங்குடி அருகே நெல்கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டதால் காத்திருக்கும் நெல் மூடைகள் 

கடந்த காலத்தைப் போல விஏஓ சான்றுகளை மட்டும் வைத்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

ஆன்லைன் பதிவில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளால் நெல்கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்..

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு 2.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது அறுவடை நடைபெற்று வருவதால் விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு 69 இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த ஆண்டு ஆன்லைன் முறையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளதால் அதில் பதிவு செய்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் நிலவுவதாலும் சர்வர் பிரச்னையாலும், கிராம நிர்வாக அலுவலர் ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்படுவதாலும் ஒரு சில நெல் கொள்முதல் நிலையங்களை தவிர மற்ற அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் நேரடி கொள்முதல் பணி நடைபெறவில்லை.

இதனால் பல ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்படாமல் அந்தந்த நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கி நிற்கின்றது. ஒரு மழை பெய்தால் கூட ஒட்டு மொத்த நெல் மணிகளும் சேதமடையும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், ஆன்லைன் முறையில் நெல் விற்பனை செய்வதை எளிமையாக்க வேண்டும் அல்லது கடந்த காலத்தைப் போலவே விஏஓ சான்றுகளை மட்டும் வைத்து நெல் கொள்முதலை மேற்கொள்ள வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது