ராணுவ தளபதி பிபின் ராவத் நினைவாக மரக்கன்றுகளை நட்டு வைத்த அமைச்சர்

ராணுவ தளபதி பிபின் ராவத் நினைவாக மரக்கன்றுகளை நட்டு வைத்த அமைச்சர்
X

மரக்கன்று நட்டு வைத்த அமைச்சர்.

உயிரிழந்த ராணுவ தளபதி பிபின் ராவத் நினைவாக மரக்கன்றுகளை நட்டு வைத்த அமைச்சர் மெய்யநாதன்.

இந்தியாவின் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவர்கள் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய ராணுவ படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் வந்து கொண்டிருந்த பொழுது குன்னூர் அருகே எதிர்பாரதவிதமாக ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்து வெடித்து சிதறியது

இதில் பயணித்த இந்தியாவின் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி உள்ளிட்ட ராணுவ வீரர்கள் 11 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் நாடு முழுவதும் மக்கள் சோகத்தில் மூழ்கினர். பல்வேறு கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் என மறைந்த இந்திய வின் தலைமை தளபதி பிபின் ராவத் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பள்ளியில் மறைந்த இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் அவர்களின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.

மேலும் மறைந்த இந்திய வின் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவ் அவர்களின் நினைவாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்து மரியாதை செய்தார். இந்த நிகழ்வில் ஆசிரியர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்