பள்ளியில் காயமடைந்து சிகிச்சை பெறும் மாணவனின் நலம் விசாரித்த அமைச்சர் மெய்யநாதன்

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பள்ளிச்சிறுவனை நலம் விசாரித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன். உடன் ஆட்சியர் கவிதா ராமு
புதுக்கோட்டை மாவட்டம்,எஸ்.களபம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் சு.பரத் என்ற மாணவன் சிகிச்சை பெற்று வருவதை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்நேரில் பார்வையிட்டு, வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம், எஸ்.களபம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4-ஆம் வகுப்பு பயிலும் சு.பரத் என்ற மாணவன் சிகிச்சை பெற்று வருவதை, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு ஆகியோர் நேரில் பார்வையிட்டு நலம் விசாரித்து, நல்ல முறையில் சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.
மாணவன் சு.பரத் சிறு காயமுடன் சிகிச்சை பெற்று நல்ல முறையில் உள்ளார் எனவும், மாணவனுக்கு தகுந்த சிகிச்சைகள் அளிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தசிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த.ஜெயலட்சுமி, வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, மாவட்ட கல்வி அலுவலர் எம்.மஞ்சுளா, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருக்கை மருத்துவர் மரு.இந்திராணி, கறம்பக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் நளினி, வட்டாட்சியர் செந்தில்குமார், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu