புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை துவக்கி வைத்தார் அமைச்சர் மெய்யநாதன்

புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை துவக்கி வைத்தார் அமைச்சர் மெய்யநாதன்
X

ஆலங்குடியில் புதிய வழித்தடத்தில்  பேருந்து சேவையை அமைச்சர்  மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

ஆலங்குடியில் புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை துவக்கி வைத்தார் அமைச்சர் மெய்யநாதன்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பேருந்துநிலையத்தில், ஆலங்குடி முதல் மறமடக்கி வரை செல்லும் புதிய வழித்தட பேருந்தை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மெய்யநாதன் பேசும்போது

தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கைக்கேற்ப தேவைப்படும் இடங்களில் புதிய வழித்தடங்களில் அரசு பேருந்து வசதி இயக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இன்றைய தினம் ஆலங்குடி பேருந்துநிலையத்தில், ஆலங்குடி முதல் மறமடக்கி வரை செல்லும் புதிய வழித்தட பேருந்து வசதி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இப்பேருந்து ஆலங்குடியிருந்து காலை 08.55 மணிக்கு புறப்பட்டு அரையப்பட்டி, மறமடக்கி பள்ளி வழியாக மறமடக்கியை சென்றடையும்.மேலும் மறமடக்கியிலிருந்து காலை 09.25 மணிக்கு புறப்பட்டு மீண்டும் ஆலங்குடி வந்தடையும்.

எனவே இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இச்சேவையினை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார்.

இந்நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக மேலாண் இயக்குநர் ராஜ்மோகன், புதுக்கோட்டை அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் இளங்கோவன், ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story