அரசுப்பள்ளியில் ரூ.ரூ.3.81 கோடியில் புதிய வகுப்பறை கட்ட அமைச்சர் பூமி பூஜை

அரசுப்பள்ளியில் ரூ.ரூ.3.81 கோடியில் புதிய வகுப்பறை கட்ட அமைச்சர் பூமி பூஜை
X

புதுக்கோட்டை அருகே மாங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜையை தொடக்கி வைத்த சுற்றுச்சூழல் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்

புதுக்கோட்டை மாவட்டம் மாங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறைக்கான பணியை அமைச்சர் மெய்யநாதன் தொடக்கி வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டம், மாங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில்,ரூ.3.81 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்படவுள்ள வகுப்பறை கட்டடப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், மாங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில், நபார்டு திட்டத்தின்கீழ், ரூ.3.81 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்படவுள்ள 18 வகுப்பறை கட்டடப் பணிக்கு, மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேற்று அடிக்கல் நாட்டினார்.

பின்னர் அமைச்சர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மாணவ, மாணவிகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு கல்வி சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் கல்விக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால் மாணவ, மாணவிகளின் கல்வி தரம் மேலும் உயரும்.

அதன்படி, பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், பள்ளி உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், குடிநீர் வசதி, கழிவறை வசதி, மின்வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகள் மாணவ, மாணவிகளின் நலனிற்காக நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில், தற்போது மாங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில், நபார்டு திட்டத்தின்கீழ், ரூ.3.81 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்படவுள்ள வகுப்பறை கட்டடப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த வகுப்பறை கட்டடம் கட்டுவதன் மூலம் மாணவ, மாணவிகளுக்கு படிப்பின் மீது மிகுந்த ஆர்வம் ஏற்படும். மேலும் பள்ளி வளாகங்களை தூய்மையாக பராமரித்திடும் வகையில் அதிக அளவிலான மரக்கன்றுகளை நடுவதற்கும், வகுப்பறை கட்டங்களை உயரிய தரத்துடன் உரிய காலத்திற்கு நிறைவேற்றி மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது போன்று அனைத்து பள்ளிகளுக்கும் தேவையான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

எனவே மாணவ, மாணவிகள் அனைவரும் தமிழக அரசால் மேற்கொள்ளப்படும் கல்வி சார்ந்த திட்டங்களை உரிய முறையில் பெற்று கல்வியில் சிறந்தவர்களாக விளங்க வேண்டும் என சுற்றுச் சூழல் மற்றும் கால நிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.மஞ்சுளா, மாவட்ட கல்வி அலுவலர் (அறந்தாங்கி) ராஜேஸ்வரி, ஊராட்சிமன்றத் தலைவர் ஜானகி, ஒன்றியகுழு உறுப்பினர் ரவி, உதவிப் பொறியாளர் (பொ.ப.து.) பாஸ்கர், பள்ளித்துணை ஆய்வாளர் இளையராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் ஆயிஷாராணி, தனி வட்டாட்சியர் ரமேஷ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!