ஆலங்குடி தொகுதியில் கிராமசபைக்கூட்டம்: அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் நடந்த மே தின கிராமசபைக்கூட்டத்தில் பேசிய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், குப்பகுடி ஊராட்சியில் நடைபெற்ற மே-1 கிராம சபைக் கூட்டத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் (01.05.2022) கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது; தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் முன்னேற்றத் திற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்தத்திட்டங்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஆண்டுக்கு 6 முறை கிராம சபைக் கூட்டங்களை நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், குப்பகுடி ஊராட்சியில் மே-1 கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இப்பகுதிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.இந்த கிராம சபைக் கூட்டமானது பொதுமக்களின் கோரிக்கைகளை நேரடியாக கேட்டறிந்து நிறைவேற்றும் வகையிலும், அரசின் மூலம் நடைபெறும் பணிகள் மற்றும் செயல்ப டுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்தும் பொதுமக்களிடம் ஆலோசனை செய்து நிறைவேற்றிடும் வகையில் இக்கூட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறுகிறது.
இப்பகுதி பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ள கோரிக்கை கள் அனைத்தும் நிறைவேற்றவும், இப்பகுதிகளில் செயல்ப டுத்த வேண்டிய திட்டங்களும் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மேலும் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, சாலை வசதி, பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் களுக்கு சுழற்சி நிதியை அதிகரிப்பது, அரசு நலத் திட்டங்களை செயல்படுத் தவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, வருவாய் கோட்டாட்சியர்; சு.சொர்ணராஜ், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, ஊராட்சிமன்றத் தலைவர் இளங்கோ, வட்டார வளர்ச்சி அலுவலர் ஆஷாராணி, வட்டாட்சியர் பெரியநாயகி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu