புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து: அமைச்சர் மெய்யநாதன் தொடக்கம்
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், மாங்காட்டில் புதிய பேருந்தை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், மாங்காட்டில் புதிய பேருந்தை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், மாங்காடு ஊராட்சி, பூச்சிக்கடை வீதியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், புதிய பேருந்து இயக்கத்தினை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்று (14.10.2021) கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் பேசியதாவது; தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். பொதுமக்களின் கோரிக்கையின்படி இன்றையதினம் பூச்சிக்கடை கடைவீதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய பேருந்து இயக்கம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இப்பேருந்து புதுக்கோட்டையிலிருந்து காலை 6.10 மணிக்கும், மாலை 4.20 மணிக்கும் புறப்பட்டு திருவரங்குளம், ஆலங்குடி, வடகாடு, மாங்காடு வழியாக பூச்சிக்கடையை வந்தடையும். மேலும் பூச்சிக்கடையிலிருந்து இப்பேருந்து காலை 7.35 மணிக்கும், மாலை 5.40 மணிக்கும் புறப்பட்டு மேற்கண்ட வழித்தடங்கள் வழியாக மீண்டும் புதுக்கோட்டையை சென்றடையும்.
மாங்காடு ஊராட்சியில் உள்ளாட்சி தேர்தலின்போது பொதுமக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளும் 100 சதவீதம் நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதேபோன்று பொதுமக்களின் பிற கோரிக்கைகளும் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள பொதுமக்களுக்கு சிறப்பான ஆட்சியை வழங்கும் வகையில் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் செயல்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் 120 நாட்களில் சிறப்பான ஆட்சியை வழங்கியதன் பயனாக தற்பொழுது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றியை தேடித் தந்துள்ளார்கள். மேலும் பொதுமக்களின் நலன் காக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அமைச்சர்
இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் இளங்கோவன், ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, ஒன்றியக் குழுத் துணைத்தலைவர் ஆனந்தி இளங்கோவன், ஊராட்சிமன்றத் தலைவர் ஜானகி செல்வராஜ், ஒன்றியக் குழு உறுப்பினர் பழனியப்பன், போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளர் எம்.சுப்பு மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu