நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் வேதனை

நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் வேதனை
X

புதுக்கோட்டை அருகே நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் மூட்டை மூட்டையாக தேங்கிக்கிடக்கும் நெல்மணிகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 101 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்க மாவட்ட ஆட்சியர் கவிதாராமு உத்தரவிட்டுள்ளார்

நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் நெல் விற்பனை செய்ய முடியாமல் வேதனை தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், குளவாய்பட்டி நெல் கொள்முதல் நிலையம் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதாராமு, புதுக்கோட்டை மாவட்டத்தில் 101 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிட்ட நிலையில், குளவாய்பட்டியில் நெல் கொள்முதல் நிலையம் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.

அதனால் அப்பகுதியை சேர்ந்த குளவாய்பட்டி, வெண்ணாவல்குடி, குப்பகுடி, வேங்கட குளம்,தெட்சிணாபுரம், பாலையூர், சேந்தாகுடி, உள்ளிட்ட 7 ஊராட்சி பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் ஆயிரம் எக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்து வயலிலேயே மூட்டைகளாக அடுக்கி வைத்துள்ளனர்.

இன்னும் அறுவடை செய்ய வேண்டிய நெல் மணிகளையும் சேர்த்தால் 1000 முட்டைகளுக்கு மேல் நெல் தேக்கம் அடைந்துள்ளது. ஆகவே குளவாய்பட்டியில் நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறந்து விவசாயிகளின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்திட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க, இப்பகுதி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் நெல் கொள்முதல் நிலையம் திறக்க உத்தரவிட்ட போதிலும், அதிகாரிகள் இன்னும் குளவாய்பட்டியில் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்காமல் இருக்க காரணம் தெரியவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!