ஸ்டாலின்தான் முதல்வர் : புதுக்கோட்டை வேட்பாளர் பேச்சு

ஸ்டாலின்தான்  முதல்வர் :  புதுக்கோட்டை வேட்பாளர் பேச்சு
X
ஸ்டாலின் தான் தமிழக முதல்வராக பதவி ஏற்பார் என்று புதுக்கோட்டை வேட்பாளர் உறுதிபடக் கூறினார்.

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வெட்டன்விடுதியில் திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து புதுகோட்டை வேட்பாளர் டாக்டர் முத்துராஜா பேசினார்.

' 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள் என்ன செய்தார்கள். திமுகவினர் ஆட்சியில் இல்லாவிட்டாலும் கஜா புயல் பாதிப்பு , ஊரடங்கு காலம் போன்ற பேரிடர் காலங்களில் தங்களது சொந்தப் பணத்தில் ஏழை எளிய மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ததை தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள்.

அதே போல் நானும் எனது சொந்த பணத்தில் என்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறேன். புதுக்கோட்டை தொகுதியில் உள்ள ஒவ்வொருவரும் தற்போது வேட்பாளர்கள்தான். நான் வெற்றி பெற்றால் இந்தத் தொகுதியில் உள்ள ஒவ்வொருவரும் சட்டமன்ற உறுப்பினர் தான். என்னை எந்த நேரத்தில் அழைத்தாலும் வருவேன். தி.மு.க தலைவர் மு. க ஸ்டாலின் மே 2ம் தேதி முதல்வராக பதவி ஏற்பது உறுதி. புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண் கல்லூரி அமைக்கப்படும் என்று கழக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதனை நிச்சயம் நிறைவேற்றுவார். இவ்வாறு பேசினார் இந்த நிகழ்வில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசு, திமுக ஒன்றிய செயலாளர்கள் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare