அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அரசு மகளிர் மேனிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதி ஏற்பு நிகழ்ச்சி
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில்,போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் துவக்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாண்புமிகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில் இன்று (11.08.2022) மாணவிகள் போதைப் பொருள் தடுப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
பின்னர் அமைச்சர் மேலும் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் போதைப் பொருட்களின் பயன்பாட்டினை முற்றிலும் தவிர்க்கும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலர்கள் இடையே 10.08.2022 அன்று ஆலோசனை மேற்கொண்டார்.
அந்தக்கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் போதை மருந்து பயன்படுத்துபவர் இதிலிருந்து விடுபடவும், போதை பயன்பாட்டிற்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளவும், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் போதைப் பொருள் பயன்படுத்தாமல் இருப்பதை தொடர்ந்து கண்காணிக்கவும், வியாபாரிகள் மற்றும் கடைகாரர்கள் போதைப் பொருள் விற்பனையை மேற்கொள்ள மாட்டேன் என்ற உறுதிமொழி ஏற்கவும், போதையின் தீமைகள் குறித்து மருத்துவர்கள் மூலமாக பரப்புரையை மேற்கொள்ளவும், போதையிலிருந்து மீள்பவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் மாவட்ட நிர்வாகங்கள் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்கள்.
அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களை கொண்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், போதைப் பொருள் தடுப்பு உறுதி மொழி மாணவிகளிடையே எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் போதை பழக்கத்தால் நாட்டிற்கும் வீட்டிற்கும் ஏற்படும் தீங்குகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு போதைப் பழக்கம் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் இணைந்து பாடுபடுவோம் என சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலர் ராஜாராம், பள்ளித் தலைமையாசிரியர் கோவிந்தராஜ், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu