திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
திருவரங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவித்த பெண்ணுக்கு நலப்பெட்டகம் வழங்கிய மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா இன்று (22.05.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதன்படி, திருவரங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தி னையும், அதனைத்தொடர்ந்து திருவரங்குளம் ஒன்றியம், குப்பக்குடி ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின்கீழ், ரூ.3,51,700 மதிப்பில் பேவர்பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும் மற்றும் குப்பக்குடியில் அங்காடி முதல் இராஜேந்திர ஆசாரி வீடு வரை சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும், குப்பக்குடி கிராம அங்காடியினையும், குப்பக்குடி ஊராட்சி, பொட்டத்திக் கொல்லை கிராமத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ், வேப்பம், நாவல், புங்கை உள்ளிட்ட மரங்கள் நடவு செய்யப்பட்டு வளர்ந்துள்ளதையும் மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் கே.வி.கோட்டையில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ், ரூ.3.65 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு, இப்பகுதி பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இப்பகுதியில் உள்ள பொதுக் கிணற்றினை சரிசெய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா உத்தரவிட்டார்.
பின்னர் ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், பதிவறையில் கோப்புகள் சரிவர பராமரிக்கப்படுகிறதா என்பதையும், இ-சேவை மையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும், மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் ஆலங்குடியில் கல்லுகுண்டு ஊருணி குளம், கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.58 லட்சம் மதிப்பில் தூர்வாரப்பட்டு மேம்பாடு செய்யப் பட்டுள்ளதையும், திருவரங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செயல்பாடுகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.
இந்நிகழ்வுகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் எஸ்.பாலகிருஷ்ணன், திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, இணை இயக்குநர் (ஊரக நலப் பணிகள்) மரு.ராமு, வட்டார வளர்ச்சி அலுவலர் கோகுலகிருஷ்ணன், உள்ளாட்சி அமைப்பு பிரதி நிதிகள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu