வேம்மங்குடி சுடுகாட்டு சாலையை செப்பணிட வேண்டுமென சிபிஎம் கட்சி வலியுறுத்தல்

வேம்மங்குடி சுடுகாட்டு சாலையை செப்பணிட வேண்டுமென சிபிஎம் கட்சி வலியுறுத்தல்
X
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவரங்குளம் கிழக்கு ஒன்றியப் பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

வேம்மங்குடி சுடுகாட்டு சாலையை செப்பணிட வேண்டுமென சிபிஎம் கட்சி வலியுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே வேம்மங்குடி மேற்கு ஊராட்சியில் சுடுகாட்டுக்குச் செல்லும் பழுதடைந்த சாலையை செப்பணிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவரங்குளம் கிழக்கு ஒன்றியப் பேரவைக் கூட்டம் ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டக் குழு முடிவுகளை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.மதியழகன் பேசினார்.நடைபெற்றுள்ள வேலைகள் குறித்து ஒன்றியச் செயலாளர் எஸ்.மணிவண்ணன் பேசினார்.

தமிழ்நாடு அரசு மின்சாரத்திற்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும். வேம்மங்குடி மேற்கு ஊராட்சியில் சுடுகாட்டுக்குச் செல்லும் பழுதடைந்த சாலையை செப்பணிட வேண்டும். கீரமங்கலத்திலிருந்து வேம்மங்குடி செல்லும் பழுதடைந்த சாலையை செப்பணிட வேண்டும். மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்ட தகுதியான பயணாளிகள் அனைவரையும் சேர்க்க வேண்டும். நூறுநாள் வேலைத்திட்டத்தில் வருடத்திற்கு நூறுநாள் வேலையும், நிர்ணயிக்கப்பட்ட கூலியும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!