ஆலங்குடியில் கல்லூரி மாணவி நூதன முறையில் கொரோனோ விழிப்புணர்வு பிரசாரம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் வசித்து வருபவர் கே .வி.கோட்டை அரசுப் பள்ளி ஆசிரியர் செல்வகுமார். ரோட்டரி சங்க செயலாளராக உள்ள இவர் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் கொரோனா குறித்த விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார்.
அதேபோல் புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பி எஸ் சி இரண்டாம் ஆண்டு படித்து வரும் செல்வகுமாரின் மகள் துளசி சமுதாய பணியாற்ற விரும்பினார். இந்த இருவரும் சேர்ந்து நூதன முறையில் கொரரோனா விழிப்புணர்வு பிரசாரம் செய் முடிவு செய்தனர்.
அதன்படி துளசி கொரோனோ பரவாமல் தடுக்கும் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தனது உடல் முழுவதும் கட்டிக்கொண்டார். ஆலங்குடியில் உள்ள சாலைகளில் சென்று பாதசாரிகள், பேருந்துகளில் பயணம் செய்வோர், வாகனங்களில் செல்வோர் ஆகியோரை வழிமறித்து முககவசம் இல்லாமல் சென்றவர்களுக்கு இலவசமாக முககவசங்கள் மற்றும் சாணிடர் வழங்கினார். அப்போது அவர்களிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.
அப்போது அந்த வழியாக ஜீப்பில் சென்ற ஆலங்குடி காவல் ஆய்வாளர் அலாவுதீன் கல்லூரி மாணவியின் செயலைக் பாராட்டினார். கல்லூரி மாணவியின் இச்செயல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu