மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: அமைச்சர் மெய்யநாதன் நேரில் ஆய்வு

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: அமைச்சர் மெய்யநாதன் நேரில் ஆய்வு
X

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சி, ராஜசங்கீதா திருமண மண்டபத்தில், ‘மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் பதிவு செய்த பயனாளிக்கு பட்டா மாறுதல் ஆணை வழங்கிய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்

இந்த முகாம்களில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அனைவரும் ஒரே குடையின்கீழ் மக்களின் கோரிக்கைக ளைப் பெற்று பதிவு செய்வார்கள்

புதுக்கோட்டை மாவட்டம், ‘மக்களுடன் முதல்வர்” திட்டத்தின்கீழ் மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சி, ராஜசங்கீதா திருமண மண்டபத்தில், ‘மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ், மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமினை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் இன்று (22.12.2023) பார்வையிட்டார். மேலும் ‘மக்களுடன் முதல்வர்” திட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட மனுதாரருக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் பட்டா மாறுதலுக்கான ஆணையினை வழங்கினார்.

பின்னர் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அரசுத் துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் அவர்களைச் சென்று சேரும் வகையில் ‘மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தை 18.12.2023 அன்று தொடங்கி வைத்தார். அந்தவகையில் இன்றைய தினம் கறம்பக்குடி பேரூராட்சி, ராஜ சங்கீதா திருமண மண்டபத்தில், ‘மக்களுடன் முதல்வர்” திட்டத்தின்கீழ், மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாம் பார்வையிடப்பட்டது.

அதன்படி, ‘மக்களுடன் முதல்வர்“ என்ற இப்புதிய திட்டத்தின் கீழ், பொதுமக்கள் அதிகமாக அணுகும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப் பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை, சமூக நலத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத் துறை, மகளிர் மேம்பாட்டுக் கழகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, எரிசக்தி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை ஆகிய 13 அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெற்று தீர்வு காண்பதற்கு முகாம்கள் நடத்தப்படுகிறது.

இந்த சிறப்பு முகாம்களில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அனைவரும் ஒரே குடையின்கீழ் மக்களின் கோரிக்கைக ளைப் பெற்று பதிவு செய்வார்கள். முகாம்களில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட துறைகளால் 30 தினங்களுக்குள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும்.

மேலும் அனைத்து தரப்பு மக்களுக்கும் மேற்கண்ட 13 அரசுத் துறைகளின் சேவைகள் எளிதில் கிடைத்திடவும், தாமதங் களை தவிர்த்திட வேண்டும் என்பதும் தான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த சிறப்பு முகாம்களில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அனைவரும் ஒரே குடையின் கீழ் மக்களின் கோரிக்கைகளைப் பெற்று பதிவு செய்வார்கள்.

முகாம்களில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட துறைகளால் 30 தினங்களுக்குள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் தங்களுக்குத் தேவையான கோரிக்கைகளை மனுக்களாக அளித்து, பயன் பெற்றுக் கொள்ளலாம் என சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.

முன்னதாக, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், கொத்தக்கோட்டை கிராமத்தில், நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.62.14 இலட்சம் மதிப்பீட்டில் வேங்கிடகுளம் சாலை முதல் கொத்தக்கோட்டை ஊராட்சிமன்ற அலுவலகம் செல்லும் சாலை பணியினை அடிக்கல் நாட்டித் தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்வில், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை , தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) .மு. செய்யது முகம்மது, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜி.அமீர் பாஷா, பேரூராட்சித் தலைவர் முருகேசன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் த.சந்திரசேகரன், அட்மா கமிட்டித் தலைவர் முத்துகிருஷ்ணன், பேரூராட்சி துணைத் தலைவர் நைனா முகமது, வட்டாட்சியர் நாகநாதன், பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!