/* */

அண்ணாமறுமலர்ச்சித்திட்டப்பணிகள்: அமைச்சர் மெய்யநாதன் தொடக்கம்

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.93.69 இலட்சத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன

HIGHLIGHTS

அண்ணாமறுமலர்ச்சித்திட்டப்பணிகள்:  அமைச்சர் மெய்யநாதன் தொடக்கம்
X

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.93.69 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ், திருவரங்குளம் ஒன்றியப் பகுதிகளில் ரூ.93.69 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை, சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் (15.12.2022) அடிக்கல்நாட்டி துவக்கி வைத்தார்.

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் 2021-2022 -ன்கீழ், ஊருணிகள் ஆழப்படுத்துதல், சிமெண்ட் சாலை அமைத்தல், பேவர் பிளாக் சாலை அமைத்தல், நெற்களம் அமைத்தல், பள்ளிகளுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள், திருவரங்குளம் ஒன்றியத்தில், கரும்பிராண்கோட்டை ஊராட்சியில் ரூ.35,86,000 மதிப்பிலும் மற்றும் கல்லாலங்குடி ஊராட்சியில் ரூ.57,83,400 மதிப்பிலும் என ஆகமொத்தம் ரூ.93,69,400 மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள், இன்றைய தினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் கிராமப்புற பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறார்ள். அந்தவகையில் இன்றையதினம் புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், கரும்பிராண்கோட்டை ஊராட்சி மற்றும் கல்லாலங்குடி ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ், பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் அடிக்கல்நாட்டி வைக்கப்பட்டது.

மேலும் ஆலங்குடி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ.75 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை அமைக்கப்படுவதற்கான முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கிராமப்புறங்களில் உள்ள குளங்கள் தூர்வாரப்பட்டு விவசாயத்திற்கு பயன்பெறும் வகையில் சீரமைக்கப்பட உள்ளன. பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு ரூ.240 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகளை செயல்படுத்தப்பட உள்ளது.

அந்தவகையில் இப்பகுதியில் உள்ள பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஊராட்சிகளில் சாலை வசதிகளை மேம்படுத்த முன்னுரிமை அளிக்கப்பட்டு புதிய சாலைவசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் முதற்கட்டமாக 400 கிலோ மீட்டர் நீளம் உள்ள சாலைகள் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் புனரமைக்கப்பட உள்ளன. குடியிருப்புகளில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் வகையில் ஒன்றிய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், கல்லாலங்குடி ஊராட்சியில் பிளாஸ்டிக் அரவை இயந்திரம் மூலம் மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் சுற்றுப்புறத்திற்கு தீமை விளைவிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க இயலும்.

கிராமப்புறங்களில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலைவசதி, தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய் வசதி உள்ளிட்டவைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே பொதுமக்கள் அனைவரும் இத்திட்டங்களை முறையாக பயன்படுத்திக்கொண்டு தங்களது பகுதியை சுகாதாரமான முறையில் பேணிபாதுகாக்க வேண்டும் என்றார் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோகுலகிருஷ்ணன், ஆயிஷாராணி, வட்டாட்சியர்; செந்தில்நாயகி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்;

Updated On: 15 Dec 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  4. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  6. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  7. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  8. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  9. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  10. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...