அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் ரூ.1.11 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள்

அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் ரூ.1.11 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள்
X

புதுக்கோட்டை மாவட்டம்ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்த் திட்டப் பணிகளை தொடக்கி வைத்த அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்

புதுக்கோட்டை மாவட்டம்ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திட்டப்பணிகளை அமைச்சர் மெய்யநாதன் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம்ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.1.11 கோடி மதிப்பீட்டில் 16 வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், குளமங்கலம் தெற்கு மற்றும் மாங்காடு ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் 2021-2022 -ன்கீழ் ரூ.1,10,73,800 மதிப்பீட்டில் 16 வளர்ச்சித் திட்டப் பணிகளை, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் (06.11.2022) பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

திருவரங்குளம் ஒன்றியம், குளமங்கலம் தெற்கு ஊராட்சியில், கிழக்கு கொப்பியான் குடியிருப்பில் ரூ.14,33,300 மதிப்பில் 323 மீட்டர் நீளமுடைய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி, கோழியான் குடியிருப்பில் ரூ.5,97,300 மதிப்பில் 115 மீட்டர் நீளமுடைய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, ஆதிதிராவிடர் காலனியில் ரூ.5,97,400 மதிப்பில் 115 மீட்டர் நீளமுடைய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, கருவன் குடியிருப்பில் ரூ.4,77,500 மதிப்பில் 102 மீட்டர் நீளமுடைய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி, உயர்நிலைப்பள்ளியில் ரூ.7,16,600 மதிப்பில் மிதிவண்டி நிறுத்தம் அமைக்கும் பணி, அளந்தலி குடியிருப்பில் அமைக்கப்படும் புதிய தோட்டக்கலை நர்சரிக்கு ரூ.4,77,700 மதிப்பில் முள்வேலி மற்றும் தண்ணீர் வசதி அமைக்கும் பணி, அளந்தலி குடியிருப்பில் ரூ.4,77,700 மதிப்பில் 11ஓ10 மீட்டர் பரப்பளவில் நெற்களம் அமைக்கு பணி என மொத்தம் ரூ.47,77,500 மதிப்பில் 7 பணிகள் பூமி பூஜை செய்து துவக்கி வைக்கப்பட்டது.

திருவரங்குளம் ஒன்றியம், மாங்காடு ஊராட்சியில், ரூ.18,89,000 மதிப்பில் மாங்காட்டான்குளம் ஊரணி ஆழப்படுத்துதல் மற்றும் படித்துரை அமைக்கும் பணி, உசிலங்கொல்லையில் ரூ.4,93,500 மதிப்பில் 95 மீட்டர் நீளமுடைய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, ஆதிதிராவிடர் காலனி நொண்டிகோவிலில் ரூ.3,18,600 மதிப்பில் 50 மீட்டர் நீளமுடைய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி, உசிலங்கொல்லையில் ரூ.6,87,000 மதிப்பில் 133 மீட்டர் நீளமுடைய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி.

அவையான்தெருவில் ரூ.7,04,600 மதிப்பில் 137 மீட்டர் நீளமுடைய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, சுந்தரகுடியிருப்பு தொடக்கப்பள்ளியில் ரூ.4,83,000 மதிப்பில் கழிப்பறை கட்டும் பணி, மணப்புஞ்சை தொடக்கப்பள்ளியில் ரூ.4,61,400 மதிப்பில் கழிப்பறை கட்டும் பணி, செட்டியார் தெருவில் ரூ.6,29,600 மதிப்பில் தோட்டக்கலை நர்சரி அமைக்கும் பணி, கோழியான் தெருவில் ரூ.6,29,600 மதிப்பில் 15ஓ13.5 மீட்டர் பரப்பளவில் நெற்களம் அமைக்கு பணி என மொத்தம் ரூ.62,96,300 மதிப்பில் 9 பணிகள் பூமி பூஜை செய்து துவக்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்ததாவது: பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை முதலமைச்சர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில் கிராமங்கள் தோறும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் புதுக்கோட்டை மாவட்டத்தில் முதற்கட்டமாக 11 ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டம் நடப்பாண்டில் செயல்படுத்தப் படுகிறது. இத்திட்டத்தின்கீழ் சாலைவசதி, குடிநீர்வசதி, பேவர்பிளாக் சாலை, சிமெண்ட் சாலை, நெற்களம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மேலும் கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த மாணவ, மாணவிகளும் உயர்கல்வி பயில வேண்டும் என்ற அடிப்படையில் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரியும், அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறு ரூ.1,000 வழங்கும் 'புதுமைப் பெண் திட்டம்" உள்ளிட்ட திட்டங்களின் வாயிலாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை, எளிய மாணாக்கர்களுக்கு குடும்பத்தில் தந்தையாக இருந்து கல்வி அளித்து வருகிறார்.

எனவே மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் முறையாக பயன்படுத்திக்கொண்டு வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில், திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் கோகுலகிருஷ்ணன், ஊராட்சிமன்றத் தலைவர்கள் சரண்யா, ஜானகி செல்வராஜன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்;

Tags

Next Story
Weight Loss Tips In Tamil