ஓட்டுப்போடாத பெண்ணை செருப்பால் அடித்த அதிமுக நிர்வாகிக்கு வலை

ஓட்டுப்போடாத பெண்ணை செருப்பால் அடித்த அதிமுக நிர்வாகிக்கு வலை
X

பெண்ணை செருப்பால் அடித்த அதிமுக நிர்வாகி செல்வராஜ்

புதுக்கோட்டை அருகே தனது மனைவிக்கு ஓட்டுப்போடாத பெண்ணை செருப்பால் அடித்த அதிமுக நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சி சேவகன் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். அதிமுக வட்ட செயலாளரான இவர் நடந்து முடிந்த தேர்தலில் 2வது வார்டான அந்த பகுதியில் அதிமுக சார்பில் தனது மனைவி வசந்தராணியை வேட்பாளராக நிறுத்தினார். இதனையடுத்து அவர் வீட்டின் அருகே உள்ளவர்களிடம் சென்று தனது மனைவிக்கு ஓட்டளிக்குமாறு கேட்டுள்ளார். அவர்களும் அதிமுகவுகே ஓட்டளிக்கிறோம் என்று உறுதியளித்துள்ளனர். இந்நிலையில் தேர்தலில் செல்வராஜ் மனைவி வசந்தராணி தோல்வியடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ், தனது பகுதியில் உள்ளவர்களே தன்னை ஏமாற்றிவிட்டார்களே என்ற ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பக்கத்து வீட்டிற்கு சென்ற செல்வராஜ், வீட்டிலிருந்த சித்ராதேவியை எனது மனைவிக்கு ஏன் ஓட்டுப்போடவில்லை என்று தகாத வார்த்தைகளால் கூறி செருப்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சித்ராதேவி கறம்பக்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்ரா தேவியை செருப்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த செல்வராஜை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!