புதுக்கோட்டையில் சட்டவிரோதமாக போதை மாத்திரையை விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுக்கோட்டையில் சட்டவிரோதமாக போதை மாத்திரையை விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
X
போதை மாத்திரை விற்பனை செய்ததாக நேற்று 4 பேர் புதுக்கோட்டையிலும் இன்று ஆலங்குடி பகுதியில் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்

புதுக்கோட்டையில் சட்டவிரோதமாக போதை மாத்திரையை விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சமீப காலமாக கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் போதை மாத்திரைகள் பயன்படுத்துவதாக மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளருக்கு புகார்கள் வந்தது அடிப்படையில் போதை மாத்திரை பயன்படுத்துபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்து சிறையில் அடைக்க எஸ்பி நிஷா பார்த்திபன் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை திருக்கோகர்ணம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று போதை மாத்திரை விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக, இன்று ஆலங்குடி காவல் நிலையத்தில் உட்பட்ட பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

ஆலங்குடி சுண்ணாம்பு காரை தெருவைச் சேர்ந்த சதீஷ், கண்ணகி தெருவை சேர்ந்த மணிகண்டன் ஆகிய இருவரும் போதை மாத்திரை பதுக்கி வைத்திருந்து, சட்டவிரோதமாக அதை விற்பனை செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!