சென்னையில் தனியார் கொரோனா சிகிச்சை மையம்

சென்னையில் தனியார் கொரோனா சிகிச்சை மையம்
X

கொரோனா சிகிச்சை மையம் (மாதிரி படம்)

சென்னையில் தனியார் நிறுவனங்களும் கொரோனா சிகிச்சை மையங்களை தொடங்கலாம் என்று மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.

சென்னையில் தனியாருக்கு கொரோனா சிகிச்சை மையம் தொடங்க மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா சிகிச்சை மையம் தொடங்க தனியார் ஹோட்டல், மருத்துவமனை மற்றும் தனியார் சேவை அமைப்புகள் அனுமதி பெறலாம் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தயாராகி வரும் கோவிட் கேர் மையத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பார்வையிட்டார். ஏற்கெனவே சென்னை மாநகராட்சி சார்பில் 12 கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர இன்னொரு சிகிச்சை மையமும் தயார் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னையில் தனியார் கொரோனா சிகிச்சை மையம் தொடங்க மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அனுமதி வழங்கியுள்ளார். மாநகராட்சியிடம் தெரிவித்துவிட்டு முறைப்படி மையங்களை தொடங்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
சிறுநீரகத்துல நச்சுக்கள் இருக்கா ?..உடனே வெளியேற்ற இந்த சில பழங்கள சாப்டுங்க..!| Best fruits for kidney cleansing naturally in tamil