முதல்வர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி நலம் விசாரிப்பு!

முதல்வர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி நலம் விசாரிப்பு!
X

பைல் படம்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், பிரதமர் மோடி இன்று தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக மருத்துவமனையில் தங்கி முதல்வர் ஸ்டாலின் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பிரதமர் மோடி இன்று தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்.

உடல் நலம் விசாரித்த பிரதமருக்கு நன்றி கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரிடம் தான் நன்கு குணமடைந்து வருவதாகத் தெரிவித்தார்.

மேலும் சென்னையில் வரும் ஜூலை 28-ஆம் தேதி துவங்க உள்ள உலக செஸ் விளையாட்டுப் போட்டிக்கு அழைப்பு விடுக்க நேரில் வருவதாக இருந்ததை குறிப்பிட்டு, தான் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்றுவருவதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர் பாலு, கனிமொழி, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோரை அனுப்பி வைப்பதாகவும், துவக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!