பன்னாட்டு விமான நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், துறையின் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன்
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், துறையின் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் குறிப்பிட்ட 11 நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு முதலில் காய்ச்சல் பரிசோதனை, அடுத்து ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்பட்டது, அதில் நெகடிவ் வந்தாலும் 7 நாள் அவர்கள் வீட்டுத் தனிமையில் இருப்பதை உள்ளாட்சி, காவல் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
விமான நிலையத்தில் நேற்று 1868 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பாதிப்பற்ற நாட்டில் இருந்து வருவோருக்கு பிசிஆருக்கான 700 ரூபாய் கட்டணத்தை அரசே செலுத்துகிறது. பாதிப்பு இல்லாத நாடுகளில் இருந்து வருவோர்களில் Random முறையில் 2 சதவீதம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. வெளிநாட்டில் இருந்து வருவோர் அனைவருக்கும் உறுதியான அரசு மருத்துவமனையில் இலவசமாக மருத்துவம் பார்க்கப்படும் , ஓமிக்ரானுக்காக 6 மருத்துவமனையில் சிறப்பு படுக்கை வார்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி , சென்னையில் இருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவுகிறது.
சிங்கப்பூரில் இருந்து வந்த திருச்சி நபருக்கு கொரோனா உறுதியானது.மேலும் அவருக்கு மரபியல் ரீதியிலான பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. பெங்களூருக்கு அவரது மாதிரியை அனுப்பியுள்ளோம் , தற்போது மருத்துவரீதியாக அவருக்கு வெறும் கொரோனா என்றளவில்தான் உள்ளது. வெளிநாட்டிலிருந்து விமானத்தில் வந்த சென்னையில் பிரிட்டனிலிருந்து வந்த சிறுமி ஒருவருக்கு கொரோனா உறுதியானது, அவருக்கும் மரபியல் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
இருவருக்கும் ஒமிக்ரான் உறுதியானால் அதை வெளிப்படையாக , அடுத்த விநாடியே தெரிவிப்போம்.. இரு விமானத்தில் பயணித்த பயணியர் , பணியாளர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து பன்னாட்டு விமான நிலையத்திலும் ஒமிக்ரானுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி 80 விழுக்காடு , இரண்டாம் தவணையை 45 விழுக்காட்டினர் செலுத்தியுள்ளனர். இந்தியாவில் அதிகபட்சமாக நாள்தோறும் 1 லட்சத்துக்கு மேல் ஆர்டிபிசிஆர் பரிசோதனை தமிழகத்தில் மேற்கொள்ளப்படுகிறது. டெக்பாத் நிலையங்களுக்கு 3 லட்சம் உபகரணங்கள் கூடுதலாக வாங்க உள்ளோம் என்று தெரிவித்தார்.
ஜெ.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி : ஒமிக்ரான் குறித்து பதற்றமடைய வேண்டியதில்லை. 10 நாளுக்கு பிறகே பாதிப்பு நிலவரம் முழுவதுமாக தெரியும். அயல் நாட்டிலிருந்து வந்த இருவருக்கும் அறிகுறியற்ற நிலையிலேயே கொரோனா உறுதியானது. ஒமிக்ரான் பாதிப்பு குறித்து மட்டும் பேசி தற்போது நாள்தோறும் 700 என்றளவில் பதிவாகி வரும் டெல்டாவை மறந்து விட கூடாது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu