/* */

அரசியல் பேசாத பாஸிடிவ் முதல்வர்

சொல் அல்ல செயல்..!

HIGHLIGHTS

அரசியல் பேசாத பாஸிடிவ் முதல்வர்
X

முதல் முறையாக முதலமைச்சர் பதவி ஏற்றுள்ள ஸ்டாலின் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் அதிகம், முதலமைச்சர் பதவி என்பது முதல் தடவையாக இருந்தாலும்.. அரசியலையும், அரசாங்க நிர்வாகத்தையும் இயக்குவது அவருக்கு புதிதல்ல என்பதை நிரூபித்து விட்டார்.

தேர்தல் முடிவுகளுக்காக காத்திருந்த அந்த ஒரு மாதம் வேறு எதுவும் நடக்கவில்லை. தமிழகத்தில் பிரச்சனை தீவிரம் அடைந்தது.. கொரோனா இரண்டாம் அலை வேகம் அதிகரித்தது அப்போது தான்.

ஒரு அசாதாரண சூழலில் பதவி ஏற்ற ஸ்டாலின் கடினமான சவால்களை எதிர்கொள்ள வேண்டிய தருணமாக இருந்தது.

மம்தாவிற்கும், பினராயி விஜயனுக்கும் இல்லாத luxury, தமிழக முதல்வருக்கு இருக்கிறது. எதிர்கட்சியாக இருந்து ஆளுங்கட்சியாகிய அரசு.

எல்லாப் பழியையும், முந்தைய அரசாங்கத்தின் மீது போட்டு விட்டு, கை மீறி போய் விட்டது. ஒன்றையும் அவர்கள் ஒழுங்காக செயல்படுத்தவில்லை என்று சொல்லி டிவி பிரச்சாரம் செய்து விட்டு, என்னால் முடிந்ததை பார்க்கிறேன் என்று வெற்றிக் களிப்பில் மிதந்துக் கொண்டு இருந்திருக்கலாம்.

ஆனால் அப்படி யாரையும் குறை கூறவில்லை, முந்தைய அரசின் மீது குற்றம் சுமத்தவில்லை. இது வரை ஸ்டாலின் குறையாக ஒரு ஸ்டேட்மெண்ட் கூட கொடுக்கவில்லை.

பதவி ஏற்ற குறுகிய காலத்தில் அரசாங்க மிஷினை முழுவதுமாக ஜெட் வேகத்தில் துரிதப்படுத்தி இருக்கிறார்.

ஒரு பாசிடிவ் கவர்ன்மென்ட்டுக்கான செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை நமக்கு உணர்த்தி காட்டியிருக்கிறார்..

சிங்கபூர்ல கேட்டு காலி ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி தூத்துக்குடி ஸ்டெர்லைட் கொண்டு போய் சேர்த்தாச்சு..

ரெடியான ஆக்சிஜன அங்கிருந்து வாங்கியாச்சு..

இனி அங்கு தயாரிக்கிரதை முழுவதும் தமிழ்நாட்டுக்கேனு முடிவாயாச்சு..

மேலும் வெஸ்ட் பெங்கால்ல இருந்து 84 MT ஆக்சிஜன் தமிழக ஆஸ்பிடல்க்கு வந்தாச்சு..

தடுப்பூசிக்கு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி பண்ண ஏற்பாடு பண்ணியாச்சு..

இக்கட்டான சூழலில் மக்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதை நன்றாக புரிந்து கொண்டு, சிகிச்சைக்கு தேவையான மருந்துகளுக்கும், ஆக்சிஜனுக்கும் துரிதமாக ஏற்பாடு செய்துள்ளார். அரசியல் கடந்து அவரது இந்த செயல்பாடுகளை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Updated On: 17 May 2021 12:10 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...