புலம்பும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள்..!
தமிழ்நாடு சீருடைய பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடி எஸ்ஐக்களாக தேர்வு செய்யப்படுவோருக்கு குறிப்பிட்ட காலத்தில் படிப்படியாக பதவி உயர்வு என்பது அளிக்கப்படுவது வழக்கம். கடந்த 1997-ம் ஆண்டு நேரடி எஸ்ஐக்களாக தேர்வு செய்யப்பட்டவர்களில் சுமார் 80-க்கும் மேற்பட்டோருக்கு ஒரு பதவி உயர்வு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் 2008 முதல் தொடர்ந்து 16 ஆண்டாக காவல் ஆய்வாளர்களாகவே பணிபுரிகின்றனர். இவர்களுக்கான டிஎஸ்பி பதவி உயர்வு பட்டியல் ஓராண்டுக்கு முன்பு வெளியிடப்பட்டது.
இப்பட்டியலிலுள்ள ஆய்வாளர்களுக்கு டிஎஸ்பிக்கான பயிற்சியும் சென்னையில் வழங்கப்பட்டது. இந்த பயிற்சி முடிந்து ஓராண்டை தாண்டியும் பதவி உயர்வு இன்றி தவிக்கின்றனர். பயிற்சிக்கு பிறகு உரிய நேரத்தில் பதவி உயர்வை பெற முடியாமலும், அதற்கான ஊதிய உயர்வு, டிஎஸ்பி சீருடை அணிய முடியாமல் பணியாற்றுகின்றனர்.
1997 தங்களுடன் பயிற்சி பெற்ற நேரடி டிஎஸ்பிக்கள் 5 கட்ட பதவி உயர்வை பெற்று, கூடுதல் டிஜிபி வரை உயர்ந்து விட்டனர். ஆனால், நாங்கள் மட்டும் ஒரு பதவி உயர்வுடன் ஆய்வாளர்களாகவே பணிபுரியும் நிலையில் இருப்பதாகவும் புலம்புகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu