காவல்துறைக்கு எதிராக புகார் செய்ய முடியுமா?
தமிழ்நாடு காவல்துறை (கோப்பு படம்)
காவல்துறைக்கு எதிராக புகார் செய்ய முடியுமா என்று பலரும் சிந்தித்து இருக்கலாம். அதற்கான விடையை இங்கே அறிந்துகொள்ளலாம்.
1) காவல் துறையினருக்கு எதிரான புகார்களை விசாரிக்கும் மாநில மற்றும் மாவட்ட அளவிலான அமைப்புகள் (State Level and District Level Police Complaint Authority) என்று ஒன்று இருப்பது நாளது தேதி வரை பெரும்பான்மையான சாமான்ய மக்கள் யாருக்கும் தெரியவில்லை என்பது தான் உண்மை.
2) காவல் துறையினருக்கு எதிரான புகார்களை விசாரிக்கும் மாநில மற்றும் மாவட்ட அளவிலான அமைப்புகளிடம் பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் அளிக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறை விவரங்களும் சாமன்ய பொது மக்களுக்கு தெரியாது என்பது தான் உண்மை.
3) காவல் துறையினருக்கு எதிரான புகார்களை விசாரிக்கும் மாநில மற்றும் மாவட்ட அளவிலான அமைப்புகள் யார் தலைமையில் செயல்படுகின்றன என்ற விவரமும் சாமான்ய பொது மக்களுக்கு தெரியாது என்பதும் உண்மை.
4) இப்படி ஒரு அமைப்பு எந்த மாவட்டத்திலும் இருக்கிறதா? என்பதும் சாமான்ய பொது மக்களுக்கு தெரியாது என்பதும் உண்மை.
5) காவல் துறையினருக்கு எதிரான புகார்களை விசாரிக்கும் மாநில மற்றும் மாவட்ட அளவிலான அமைப்புகள் (State Level and District Level Police Complaint Authority) தமிழ்நாட்டில் அரசாணை (நிலை) எண்.643 உள் (காவல். 8) துறை நாள் 14.11.2019 வெளியிடப்பட்ட நாள் முதல் செயல்படத் தொடங்கியது என்பதும் சாமான்ய பொது மக்களுக்கு தெரியாது என்பது தான் உண்மை. சாமான்ய மக்களின் விழிப்புணர்வுக்காக மட்டுமே.
இது சாதாரண மக்களின் விழிப்புணர்வுக்காக கொடுக்கப்பட்டுள்ள தகவல்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu