பிரதமர் மோடி 27-ம் தேதி தமிழகம் வருகை: இ.பி.எஸ். சந்திக்க வாய்ப்பு உள்ளதா?

பிரதமர் மோடி 27-ம் தேதி தமிழகம் வருகை: இ.பி.எஸ். சந்திக்க வாய்ப்பு உள்ளதா?
X

எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி (கோப்பு படம்)

பிரதமர் மோடி மார்ச் 27-ம் தேதி தமிழகம் வருகிறார். இ.பி.எஸ். சந்திக்க வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

வருகிற 27ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் 2 லட்சத்து 36 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் ஒருங்கிணைந்த விமான முனையங்கள் கட்டப்படுகின்றன. இதன் முதல் கட்டட பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இதற்கான கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது நவீன கருவிகள், உபகரணங்கள் பொருத்தப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஐந்து தளங்களை கொண்ட புதிய முனையத்தில், தரை தளத்தில் சர்வதேச பயணிகள் வருகைக்காகவும், இரண்டாவது தளத்தில் பயணிகள் புறப்படுவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். இங்கு கார் நிறுத்துமிடம், வணிக வளாகம், திரையரங்குகள் ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டன.

இந்நிலையில், மார்ச் 27ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி புதிய ஒருங்கிணைந்த முனையத்தை முறைப்படி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருப்பதாக, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறினர். மோடி வருகையினையையொட்டி அவரை வரவேற்க பா.ஜ.க.,வினர் தயாராகி வருகின்றனர்.

தமிழகம் வரும் மோடி வழக்கமாக ராஜ்பவன் சென்று ஓய்வெடுப்பது வழக்கம். இம்முறையும் அவர் ராஜ்பவன் செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறும் பா.ஜ.க.,வினர், பிரதமர் மோடி நலத்திட்டங்கள் தொடங்கி வைக்கவே வருகிறார். இதனால் அரசியல் பிரமுகர்கள் சந்திப்பு இருக்குமா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அ.தி.மு.க.வுடன் உரசல் அதிகமாகி உள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி பிரமரை சந்திக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு தற்போதைய நிலையில் எதுவும் சொல்ல முடியாது. எடப்பாடி சந்தித்தால், ஓ.பி.எஸ்.,சும் சந்திக்க வாய்ப்பு கேட்பார். இது பற்றி கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும் என்றனர். இந்நிலையில் தமிழக நிலவரம் குறித்து பா.ஜ.க., சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை பிரதமர் கையில் வழங்கப்படலாம். தி.மு.க., தலைவர்கள் சமீபகாலமாக பேசி வரும் பேச்சுக்கள் குறித்தும் பிரதமர் கவனத்தி்ற்கு கொண்டு செல்லப்படும் எனவும் பா.ஜ.க.வினர் தெரிவித்தனர்.

Tags

Next Story