தமிழக பட்ஜெட் 2021-22: பெட்ரோல் மீதான வரியில் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு

தமிழக பட்ஜெட் 2021-22:  பெட்ரோல் மீதான வரியில் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு
X

பைல் படம்

பெட்ரோல் மீதான வரிக்குறைப்பு காரணமாக விலையில் 3 ரூபாய் குறைக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்

இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பெட்ரோல் விலை குறைப்பு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியில் 3 ரூபாயைக் குறைக்க முதல்வர் ஆணையிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் இந்த பெட்ரோல் வரி குறைப்பால் ஆண்டுக்கு ரூ.1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

பெட்ரோல் மீதான வரி குறைப்பு உழைக்கும், நடுத்தரக் குடும்பங்களுக்கு நிவாரணமாக அமையும் என்று நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

Tags

Next Story