கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கிய மகிளா நீதிமன்றம்
ஆனந்த் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த அரவிந்த்
பெரம்பலூர் மாவட்டத்தில் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட இரண்டு குற்றவாளி களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி பெரம்பலூர் மகிளா நீதிமன்றம் தீரப்பளித்தது
.பெரம்பலூர் மாவட்டம், நான்கு ரோடு அருகே உள்ள மாலா நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சேட்டு மகள் கமருன்னிசா(27). இவர் குன்னம் வட்டம், அல்லிநகரம் அருகே உள்ள எழந்தங்குளி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார் .
பெரம்பலூர் பாரதிதாசன் நகரைச் சேர்ந்த ஆனந்த் என்பவரும் கமருன்னிசாவுக்கும் சிறு வயதிலிருந்தே நட்பாக இருந்து வந்துள்ளனர். சில நாட்களில் கமருன்னிசா ஆனந்த்திடம் பழகுவதை நிறுத்தி விலகியுள்ளார். ஆனந்த் கமருன்னிசாவை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு கமருன்னிசா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
ஆசிரியை கமருன்னிசாவை 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 13 -ஆம் தேதி அன்று வழக்கம் போல எலந்தங்குழி பள்ளிக்கு செல்ல பெரம்பலூரிலிருந்து அல்லி நகரம் சென்று, அங்கே இருந்து அவருடைய இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கே தனது நன்பனோடு வந்த ஆனந்த் ஆசிரியை கமருன்னிசாவை வழிமறித்து தாக்கி கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இதைப்பார்த்த அந்த கிராமத்து மக்கள், கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியவர்களை விரட்டிச் சென்று ஆனந்த் என்பவரை மட்டும் மடக்கிப் பிடித்தனர். அவரை அடித்து உதைத்து குன்னம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். உடன் வந்த மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். கத்தி குத்தில் படுகாயமடைந்த ஆசிரியை கமருன்னிசா அரியலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
கொலை செய்த ஆனந்த்தையும் அவருடன் இருந்த அரவிந்த் ஆகிய இருவரையும் குன்னம் போலீஸார் கைது செய்து கொலை வழக்குப் பதிவு செய்து , பெரம்பலூர் மகிளா நீதிமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில் . இதற்கான தீர்ப்பை பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி கிரி, அக்டோபர் 28. ம் தேதி இன்று வழங்கினார் அதன்படி கமருனிசா என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றத்திற்கான, குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளிகள்
ஆனந்த் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த அரவிந்த் ஆகிய இருவருக்கும் தனித்தனியே ஆயுள் தண்டனை மற்றும் இருவருக்கும் தலா ரூ. 57,500 அபராதம் வழங்கி தீர்ப்பளித்தார். மேலும் அபராத தொகை கட்ட தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும், என தீர்ப்பளித்து உத்தரவிட்டார். குற்றவாளிகள் இருவரும் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu