வேப்பந்தட்டையில் விஜய் மக்கள் இயக்கத்தின் கலந்தாய்வு கூட்டம்

வேப்பந்தட்டையில்   விஜய் மக்கள் இயக்கத்தின் கலந்தாய்வு கூட்டம்
X

பெரம்பலூர் மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் விஜய் மக்கள் இயக்கத்தின் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் மேட்டுப்பாளையம் கிராமத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்திற்கு வேப்பந்தட்டை ஒன்றிய தலைவர் சின்னதுரை முன்னிலை வகித்தார்.

மேலும் இக்கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் சிவா புதிதாக சேர்ந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டையினை வழங்கினார். நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகி ராஜதுரை, ஒன்றிய அமைப்பாளர் பிகில்குமார், ஒன்றிய துணைத்தலைவர் சுறா என்ற ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது