நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: பெரம்பலூரில் நாம் தமிழர் கட்சி ஆலோசனை கூட்டம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: பெரம்பலூரில் நாம் தமிழர் கட்சி ஆலோசனை கூட்டம்
X

பெரம்பலூரில் நாம் தமிழர் கட்சியின் நகர்ப்புற தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூரில் நாம் தமிழர் கட்சியின் நகர மன்ற தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக வருகின்ற நகரமன்ற தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் நாம் தமிழர் கட்சியின் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் வந்தியதேவன் தலைமையில் நடைபெற்றது .

மாநில மருத்துவ பாசறை பொறுப்பாளர் சேசு வரவேற்பு உரை வழங்கினார், பெரம்பலூர் மாவட்டத்தலைவர் ரத்தினவேல் துவக்க உரையாற்றினார்,பெரம்பலூர் தொகுதி செயலாளர் பாலகுரு மற்றும் தொகுதி தலைவர் முருகேசன் மற்றும் குன்னம் தொகுதி செயலாளர் இராஜோக்கியம்,குன்னம் தொகுதி தலைவர் மைக்கேல் அய்யா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் எதிர்வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காக பெறப்பட்ட விருப்பமனு குறித்து வேட்பாளர்கள் தேர்வு, நிதிபங்களிப்பு, தேர்தலில் வெற்றிபெற வியூகம் வகுத்தல் ,தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

நிகழ்வின் இறுதியாக பெரம்பலூர் நகர செயலாளர் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் செல்லம்மாள் ஆகியோர் நன்றியுரையாற்றினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!