/* */

தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 802 வழக்குகள் தீர்வு காணப்பட்டது

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 802 வழக்குகள் தீர்வு காணப்பட்டது

HIGHLIGHTS

தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 802 வழக்குகள் தீர்வு காணப்பட்டது
X

பெரம்பலூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்ற விசாரணையில் தீர்வு அளிக்கும் நீதிபதிகள்

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நீதிமன்றத்தில் இன்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 802 வழக்குகள் தீர்வு காணப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியுமான ஏ. பல்கிஸ் தலைமையில் நடைபெற்றது. குடும்ப நல நீதிபதி ஏ.தனசேகரன், தலைமை நீதித்துறை நடுவர் எம்.மூர்த்தி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாரும், சார்பு நீதிபதியுமான ஆர்.லதா ஆகியோர் முன்னிலையில் நீதிபதிகள் கொண்ட அமர்வானது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை விசாரித்து தீர்வு கண்டது.

இதில் வங்கி வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள் , சிறு குற்ற வழக்குகள், குடும்ப நல வழக்குகள், குடும்ப நல வழக்குகள் என மொத்தம் 802 வழக்குகள் ரூ,2 கோடியே 74 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் தீர்வு காணப்பட்டது. வழக்கறிஞர்கள், காவல்துறையினர், நீதிமன்ற அலுவலர்கள், வழக்காடிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 12 March 2022 12:45 PM GMT

Related News