பெரம்பலூர் அருகே கும்பாபிஷேகம் நடைபெற்ற கோயிலில் உண்டியல் திருட்டு

பெரம்பலூர் அருகே  கும்பாபிஷேகம் நடைபெற்ற கோயிலில் உண்டியல் திருட்டு
X

பெரம்பலூர் அருகே உண்டியல் திருட்டு போன மகா மாரியம்மன் கோயில்.

பெரம்பலூர் அருகே கும்பாபிஷேகம் நடைபெற்ற கோயிலில் உண்டியல் திருட்டு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் அருகே பாளையம் கிராமத்தில் வ.உ.சி தெருவில் உள்ள மகா மாரியம்மன் ஆலயத்திற்கு கடந்த 15-ம்தேதியன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

புதிதாக கட்டப்பட்ட ஆலயம் என்பதால் உண்டியலை கோயில் அலுவலகத்திற்கு உள்ளேயே வைத்திருந்தனர். அதிகாலையில் அப்பகுதியில் பொதுமக்கள் கோவில் திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் . உடனே கோவிலில் அருகே சென்று பார்த்தபோது உண்டியல் திருட்டு போனது தெரியவந்தது.

இதுபற்றி பெரம்பலூர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பொதுமக்களிடையே சம்பவத்தைப் பற்றி விசாரித்து வருகின்றனர். கோவில் உண்டியல் திருட்டு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் காவல்துறை இருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
ai marketing future