பெரம்பலூரில் ஸ்டாலின் பிறந்த நாள் விழா இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

பெரம்பலூரில் ஸ்டாலின் பிறந்த நாள் விழா இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
X
பெரம்பலூரில் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
பெரம்பலூரில் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை வழக்கறிஞர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தமிழக முதலமைச்சர் - தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில், பெரம்பலூர் மாவட்ட ஒருங்கினைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட தலைமை குற்றவியல் அரசு வழக்கறிஞர் ப.செந்தில்நாதன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிகொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் SC,ST சிறப்பு நீதிமன்ற அரசு வழக்கறிஞர் ந.புகழேந்தி, சார்பு நீதிமன்ற கூடுதல் அரசு சிறப்பு வழக்கறிஞர் கோவிந்தராஜ், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் சுரேஷ்குமார் மற்றும் வழக்கறிஞர்கள் கே.ஜி.மாரிக்கண்ணன், பி.இளமைச்செல்வன், செல்லையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!