காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கு பெரம்பலூரில் சிறப்பு விசாரணை முகாம்

காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கு பெரம்பலூரில் சிறப்பு விசாரணை முகாம்
X

காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கு பெரம்பலூரில் நடைபெற்ற சிறப்பு விசாரணை முகாம்.

காணாமல் போனவர்களை கண்டுபிடித்து குடும்பத்தாரிடம் ஒப்படைக்கும் விசாரணை முகாம் நடத்திய பெரம்பலூர் மாவட்ட காவல்துறை

திருச்சி மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் உத்தரவின்படி, திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் ராதிகா மேற்பார்வையில், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி, தலைமையில், பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில், பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை பதியப்பட்டுள்ள காணாமல் போனவர்களின் வழக்குகளையும், மற்ற மாவட்டத்தில் பதியப்பட்டுள்ள காணாமல் போனவர்களின் வழக்குகளின் விவரத்தையும் ஒன்றிணைத்து, காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க, அவர்களின் குடும்பத்தினரின் உதவியுடன் அடையாளம் காணும் சிறப்பு விசாரணை முகாம் நடைபெற்றது.

இந்த விசாரணை முகாமினை, பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியபிரகாசம் (தலைமையிடம்) மற்றும் வாணி காவல் ஆய்வாளர், குற்ற பதிவேடுகள் கூடம் மற்றும் அவரது குழுவினர் நடத்தினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!