பெரம்பலூர் நகைகடை அதிபரிடம் கொள்ளை வழக்கில் மேலும் ஒரு இளைஞர் கைது

பெரம்பலூர் நகைகடை அதிபரிடம்  கொள்ளை வழக்கில் மேலும் ஒரு இளைஞர் கைது
X

பெரம்பலூர் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜ்குமார்.

பெரம்பலூர் நகைகடை அதிபரிடம் நடந்த கொள்ளை வழக்கில் மேலும் ஒரு இளைஞரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

பெரம்பலூரில் பிரபல நகைக்கடை உரிமையாளர் கருப்பழ்ண்ணணை அவரது வீட்டில் வைத்து கத்திமுனையில் மிரட்டி 103 சவரன் நகை,9 கிலோ வெள்ளி,10 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் கார் கொள்ளையடிக்கப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடிவந்தனர்.

சம்பந்தப்பட்ட இடத்தில் சேகரிக்கப்பட்ட கைரேகை பதிவுகள் மற்றும் சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு தனிப்படை போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.இந்த நிலையில் கொள்ளை நடந்த வீட்டில் திருடப்பட்ட கார் ஆலம்பாடி சாலை திருநகர் பகுதியில் நிற்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில் அரும்பாவூரை சேர்ந்த செந்தில்குமார்,பெரம்பலூரைச்சேர்ந்த ஆனந்தன் ஆகியோரையும்,திருட்டு பொருளை வைத்திருந்தற்காக செந்தில்குமாரின் தாயார் ராஜேஸ்வரி,மனைவி கவிமஞ்சு ஆகியோரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

நான்கு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் கொள்ளையில் தொடர்புடைய மற்றொரு நபரை போலீசார் தேடிவந்தனர்.இந்த நிலையில் தற்போது பெரம்பலூர்சங்குபேட்டையை சேர்ந்த ராஜ்குமார்(25)என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைதுசெய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.நகை பணம் பறிமுதல் பற்றிய விபரங்கள் தெரியவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி