பெரம்பலூர்: சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு

பெரம்பலூர்: சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு
X

பெரம்பலூரில் சாலை பாதுகாப்பு குறித்து போக்குவரத்து போலீசார் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பெரம்பலூர் நகரில் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வினை போலீசார் ஏற்படுத்தினர்.

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி உத்தரவின்படி பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ்குமார் தலைமையில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே பெரம்பலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுப்பையன் மற்றும் அவரது குழுவினர் பொது மக்களிடம் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இந்த விழிப்புணர்வில் பொது மக்களிடம் தலைக் கவசம் அணிந்து தான் இரு சக்கர வாகனத்தை ஓட்ட வேண்டும் எனவும், சாலை விதிகளை கண்டிப்பாக பின்பற்றி தான் வாகனத்தை இயக்க வேண்டும் என்றும், நான்கு சக்கர வாகனத்தை ஓட்டும்போது சீட்பெல்ட் அணிய வேண்டும் எனவும் கூறியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!