பெரம்பலூர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா கட்சியினர் திடீர் மறியல்

பெரம்பலூர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக காமராஜர் வளைவு அருகில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.
சேலம் மற்றும் தாம்பரத்தில் பாப்புலர் ஃப்ரண்டின் அணிவகுப்பிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதை தொடர்ந்து, தமிழக அரசையும் காவல்துறையையும் கண்டிக்கும் விதமாக, பெரம்பலூர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக காமராஜர் வளைவு அருகில் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் அபுதாஹிர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
சாலை மறியலில் ஈடுபட்ட பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் முஹம்மது இக்பால், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் முஹம்மது இக்பால் உள்பட 30க்கும் மேற்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் கட்சியினர், பெரம்பலூர் காவல் துறையினர் கைது செய்யப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu