பெரம்பலூர் அருகே காதல் ஜோடி விஷம் அருந்தி தற்கொலை முயற்சி

பெரம்பலூர் அருகே காதல் ஜோடி விஷம் அருந்தி தற்கொலை முயற்சி
X

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நவீன்குமார்.

அரியலூர் மாவட்டம் மழவரநல்லூர் கிராமத்தை சேர்ந்த நவீன் குமார் (19),அதே மாவட்டம் அம்பாவூர் கிராமத்தை சேர்ந்த ராசாத்தி (21) என்ற இருவரும் காதலித்து வந்துள்ளனர்.நவீன் குமாருக்கு வயது குறைவு என்பதால் காதலி வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிகிறது.

இந்தநிலையில் காதல் ஜோடி பெரம்பலூர் மாவட்டம் மூங்கில்பாடி கிராமத்தில் விஷம் அருந்தியும் காதில் ஊற்றியும் தற்கொலை முயற்சி செய்துள்ளனர்.பின்னர் அவர்களாகவே இருசக்கர வாகனத்தில் சென்று குன்னம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் உதவி பெற்றுள்ளனர்.


இருவரின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அதில் பெண்ணின் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளது.இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்